திதி |
அதிபதி |
செய்ய தக்க கார்யம் |
|
1 |
பிரதம |
அக்னி பகவான் |
உலோகம்,மரம் இவைகளில் சிற்ப வேலைகள், பாய் முடைதல் படுக்கைக்கு, சித்திர வேலை செய்தல் போன்றதும், ஆயுதம் கத்தி போன்றது செய்யவும். |
2 |
துதியை |
துவஷ்டா தேவதை |
விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது. |
3 |
திருதியை |
பார்வதி |
வீடு கட்டுதல், கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்த திதி ஆகும். |
4 |
சதுர்த்தி |
கஜநாதன் [விநாயகர்] |
வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்கார்யம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும்.[சங்கடகர சதுர்த்தி இதற்க்கு விதி விலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்க்கு விதி விலக்கு] |
5 |
பஞ்சமி |
சர்ப்பம் |
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்க்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம். |
6 |
சஷ்டி |
முருகன் |
வேலைக்கு சேர,பசுமாடு வாங்க,வீடு வாங்க, வாகனம் வாங்க , மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொதுகணக்கு. |
7 |
சப்தமி |
சூரியன் |
வீடுகட்ட,உபநயனம், விவாஹம்,தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்றம், விவசாயம், துவிதியை,திருதியை பஞ்சமி திதியில் சொல்ல பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர்கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி. |
8 |
அஷ்டமி |
சிவபெருமான் |
யுத்தம், தான்யம்,வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது. |
9 |
நவமி |
பாராசக்தி |
பகைவரை சிறைபிடிக்க, பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது. |
10 |
தசமி |
ஆதிசேஷன் |
தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகு கேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி , மங்களகரமான கார்யம், ஜலம், முக்கியஸ்தரை சந்திக்க உகந்தது இந்த திதி . |
11 |
ஏகாதசி |
தர்ம தேவதை |
பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம்,விவசாயம்,ஆபரணம்,வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம். |
12 |
துவாதசி |
விஷ்ணு |
விருந்துண்ண, தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள்,தர்மகார்யம்,நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [ திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது ] |
13 |
திரயோதசி |
மன்மதன் |
வ்குகாலம் நிலைக்கும் அனைத்தும், செளபாக்கியமான மங்களகரமான கார்யம் ,நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்டகால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும். |
14 |
சதுர்தசி |
கலிபுருஷன் |
வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்! தேய்பிறையில் சிவ பெருமானை வணங்கி வர வேண்டும்! பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை மற்றும் சுக்கில பட்ஷம் எனும் வளர்பிறையில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகார்யம் தவிர்க்க. [ அமாவாஸைக்கு முதல் நாளில் ] |
15 |
அமாவாஸை பெளர்ணமி |
காளி |
அமாவாஸையில் முன்னோர்மற்றும் இறந்தவர்களுக்கு உண்டான கார்யம் மட்டும் செய்யவும்! பெளர்ணமியில் செய்ய தக்கவை கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும் ,யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும் மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம். |