மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.
சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும். இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். இதை தினமும் கூற அருள்செல்வம் முதலில் வரும், பின்பு பொருள்செல்வம் தானாக தேடி வரும்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
அஷ்ட லக்ஷ்மிகளும் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால், இவர்களின் சக்தி குறையும் என்று கூறுவர். இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று, ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு. நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலும் மற்றும் செயலும் பஞ்சபூதங்களை சார்ந்ததாகவே இருக்கும். உலகம் இயங்குவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பஞ்ச பூதங்களால் தான் என புராணங்களில் சொல்லப்படுகிறது.
“பஞ்சபூதத்திக தேவகா” என்ற இந்த மந்திரத்தை 16 முறை பிரம்மமுகூர்த்தத்தில் ஒலிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பஞ்சபூத தோஷங்கள் அனைத்தும் விலகும். பஞ்சபூதங்களை நம்பி தொழில் புரிபவர்கள், பஞ்சபூதங்களால் ஆபத்துக்கள் ஏற்படுபவர்கள், பஞ்சபூதத் தோஷங்கள் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு ஜெபிக்க வேண்டும்.
பஞ்சபூத சக்திகளை கொண்ட ஐந்து மூர்த்திகளான பிரம்மன், உருத்திரன், மகேஸ்வரன், சதா சிவன் மற்றும் விஷ்ணு. பஞ்ச சக்திகளான பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்திகளாகும். இவைகளை மந்திரங்களுடன் நாம் ஜெபித்தால் நமக்கு பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கும். நமது அண்டம் முழுவதும் பஞ்சபூதங்களினால் உருவானது எனவே இது அனைத்தும் நமக்கு சாதகமாக இருப்பதற்கு இந்த வழிபாடு மிகவும் முக்கியம்.
மனிதனுக்கும் பஞ்ச பூதங்கள், அதன் ஐந்து குணங்கள், ஐந்து புலன்கள், ஐந்து மனித மேம்பாடுகள் ஆகியவற்றுக்கு இடையே இயல்பாகவே தொடர்பு உள்ளது. அமாவாசை முடிந்த 5-ம் நாள் மற்றும் பெளவுர்ணமி முடிந்த 5-ம் நாள் வருவது மகா சக்தியான பஞ்சமி திதி. இந்நாளில் நாம் ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கிள் ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.
இச்சமயத்தில் நாம் “ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி இனிப்பு அல்லது பழங்களைக் கொண்டு நைவேத்தியத்தை செய்ய வேண்டும்.