ராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம். மாந்தி 3,6,10 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப் பலாபலன்கள்:
1ல் மாந்தி இருந்தால்:
ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச்
சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்
2ல் மாந்தி இருந்தால்:
ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு
இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள். இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary)மட்டும்தான்.
3ல் மாந்தி இருந்தால்:
ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன். உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்காது. சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
4ல் மாந்தி இருந்தால்:
ஒரே வரியில் சொன்னால் – துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)
5ல் மாந்தி இருந்தால்:
நிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான்.
நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள்
தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள்.
6ல் மாந்தி இருந்தால்:
துணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes).
மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம்
ஈடுபாடுகொள்வாள் (loved by women)
7ல் மாந்தி இருந்தால்:
வாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை
உடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன். சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்!
8ல் மாந்தி இருந்தால்:
கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக்
கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.
9ல் மாந்தி இருந்தால்:
தன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய் விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.
10ல் மாந்தி இருந்தால்:
ஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு
இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட
விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை
உடையவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்
11ல் மாந்தி இருந்தால்:
ஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது . உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.
12ல் மாந்தி இருந்தால்:
ஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.
சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள். சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.